மீன் கடை அமைக்க மகளிருக்கு 60 சதவீதம் மானியம் கலெக்டர் தகவல்

மீன் கடை அமைக்க மகளிருக்கு 60 சதவீதம் மானியம் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
-
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத்திட்டம் 2021-2022-ன் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீன் விற்பனை அங்காடி அல்லது அலங்கார மீன் வளர்ப்பு நிலையம் மற்றும் சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதில் மீன் விற்பனை அங்காடி அல்லது அலங்கார மீன் வளர்ப்பு நிலையம் அமைத்தல் திட்டத்தில் 1 அலகுகள் மகளிர் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சம் ஆகும்.இதில் 60 சதவீதம் மானியமாக வழங்கப்படும்
மேலும் சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்யும்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு திட்ட மதிப்பீடு ரூ.7½ லட்சம் ஆகும். இந்த தொகையில் பொதுபிரிவினருக்கு 40 சதவீதம் மானியமும் மகளிர் மற்றும் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தில், பயன்பெற விரும்புவோர் சிவகங்கை பெருமாள் கொவில் தெரு, யூனியன் வங்கி மாடியில், செயல்படும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.