வங்கியில் கடன் வாங்கி தருவதாக 60 பவுன் நகைகள்-ரூ.1¾ கோடி மோசடி


வங்கியில் கடன் வாங்கி தருவதாக 60 பவுன் நகைகள்-ரூ.1¾ கோடி மோசடி
x

புதுக்கோட்டையில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக 60 பவுன் நகைகள், ரூ.1 கோடியே 80 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்தனர்.

புதுக்கோட்டை

ஜவுளிக்கடை உரிமையாளர்

புதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியை சேர்ந்தவர் சாந்தலட்சுமி (வயது 45). இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவர் தனது ஜவுளிக்கடை தொழிலை மேம்படுத்த விரும்பினார். அப்போது புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தை சேர்ந்த செந்தாமரை (47) என்பவர், தனக்கு வங்கி அதிகாரிகளை தெரியும் எனவும், தான் வங்கியில் கடன் வாங்கி தர ஏற்பாடு செய்வதாக சாந்தலட்சுமியிடம் கூறினார்.

அவர் ரூ.10½ கோடி கடன் பெற்று தர கூறினார். இதற்கு கமிஷன் தொகை கொடுக்க வேண்டும் என செந்தாமரை கூறியிருக்கிறார். இதையடுத்து 60 பவுன் நகைகளையும், ரூ.1 கோடியே 80 லட்சத்தையும் செந்தாமரையிடம் சாந்தலட்சுமி கொஞ்சம், கொஞ்சமாக வழங்கினார்.

போலீசில் புகார்

இந்த நிலையில் பணத்தை பெற்ற பின் கடன் வாங்கி தர ஏற்பாடு செய்யவில்லையாம். இதனால் பணம் மற்றும் நகைகளை அவர் திருப்பி கேட்ட போது கொடுக்கவில்லை. மேலும் இதனை கேட்ட போது சாந்தலட்சுமியை செந்தாமரை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் சாந்தலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட செந்தாமரையை கைது செய்தனர்.


Next Story