பொள்ளாச்சி மார்க்கெட்டில் ரூ.1.48 கோடியில் 60 கடைகள்


பொள்ளாச்சி மார்க்கெட்டில் ரூ.1.48 கோடியில் 60 கடைகள்
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

52 ஆண்டு பழைய கட்டிடத்தை இடித்து விட்டு பொள்ளாச்சி தேர்நிலை மார்க்கெட்டில் ரூ.1 கோடியே 48 லட்சத்தில் 60 கடைகள் கட்டப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

52 ஆண்டு பழைய கட்டிடத்தை இடித்து விட்டு பொள்ளாச்சி தேர்நிலை மார்க்கெட்டில் ரூ.1 கோடியே 48 லட்சத்தில் 60 கடைகள் கட்டப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்நிலை மார்க்கெட்

பொள்ளாச்சியில் காந்தி மார்க்கெட், தேர்நிலை மற்றும் திரு.வி.க. மார்க்கெட்டுகள் உள்ளது. இதில் தேர்நிலை மார்க்கெட் தவிர மற்ற 2 மார்க்கெட்டிலும் பழுதடைந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு, புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தேர்நிலை மார்க்கெட்டில் கடைகள் கட்டப் பட்டு 52 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அந்த கட்டிடங்கள் பழுதடைந்து காணப்பட்டன. மேலும் சுவர்களில் மரங்கள் வளர்ந்து கட்டிடம் பலவீனமாக உள்ளது.

பழைய கட்டிடங்கள்

இதனால் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்று பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிதாக கடைகள் கட்டப்பட உள்ளது. எனவே மார்க்கெட்டில் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகளை தாங்களே காலி செய்து வருகின்றனர்.

இது குறித்து பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

ரூ.1.48 கோடி ஒதுக்கீடு

பொள்ளாச்சி தேர்நிலை மார்க்கெட்டில் கடந்த 1971-ம் ஆண்டு கட்டிடங்கள் கட்டப்பட்டன. அந்த கட்டிடங்கள் கட்டி 52 ஆண்டு ஆகிறது. இதனால் அந்த கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன.

எனவே பழைய கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு, புதிதாக கட்டிடம் கட்டப்பட உள்ளது.

அங்கு புதிதாக 60 கடைகள் கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ.1 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் கடைகள் இடித்து அகற்றப்படும்.

எனவே தாங்களா கவே முன்வந்து வியாபாரிகள் கடைகளை காலி செய்து வருகின்றனர்.

தற்காலிக இடம்

இந்த நிலையில் வியாபாரிகள் கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட வசதியாக தெப்பக்குளம் அருகே தற்காலிகமாக இடம் ஒதுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே வியாபாரிகளு டன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.

மார்க்கெட்டில் கட்டிடம் கட்டி முடித்த பிறகு கடைகளை வியாபாரிகள் ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story