600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் தலா 12 கிலோ கொண்ட 50 மூடைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதனைவேனுடன் பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த அரிசி உரிமையாளர் விக்கி என்ற விக்னேஷ் மற்றும் வேனில் இருந்த மேல அனுப்பானடியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 22) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். விக்கி என்ற விக்னேசை தேடி வருகின்றனர்.


Next Story