600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
திருவண்ணாமலையில் 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி, குறுகிய காலத்தில் தனது மருத்துவ சேவையால் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. திருவண்ணாமலை மட்டுமின்றி அருகில் ்உள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் வந்து சிகிச்சை பெற்று குணமடைந்து செல்லும் வகையில் மிகப்பெரிய மருத்துவ சேவையை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார். அதன்பின்னர் மருத்துவமனையை முதல்-அமைச்சர் பார்வையிடுகின்றார்.
பின்னர் திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் தி.மு.க. சார்பில் நடைபெறும் வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டத்தில் முதல்- அமைச்சர் பங்கேற்கிறார்.