600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.
திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.
அருணை மருத்துவ கல்லூரி
திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி, குறுகிய காலத்தில் தனது மருத்துவ சேவையால் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. திருவண்ணாமலை மட்டுமின்றி அருகில் ்உள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் வந்து சிகிச்சை பெற்று குணமடைந்து செல்லும் வகையில் மிகப்பெரிய மருத்துவ சேவையை வழங்கி வருகிறது.
அருணை மருத்துவ கல்லூரி தலைவர் சங்கரி, துணைத்தலைவர் எ.வ.குமரன், மருத்துவ கல்லூரி இயக்குனர் எ.வ.வே.கம்பன் ஆகியோரது மேற்பார்வையில் இயங்கிவரும் இந்த மருத்துவமனை திருவண்ணாமலை மாவட்டத்தில் சர்வதேச தரத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது. சென்னை, கோவை, வேலூர் மற்றும் புதுச்சேரி போன்ற பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு இணையான மருத்துவ சிகிச்சையை பொதுமக்களுக்கு அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வழங்கி வருகிறது.
பல்நோக்கு
இந்த நிலையில் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.