மாதந்தோறும் 600 தெருநாய்களுக்கு கருத்தடை


மாதந்தோறும் 600 தெருநாய்களுக்கு கருத்தடை
x
தினத்தந்தி 21 Aug 2023 1:30 AM IST (Updated: 21 Aug 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகரில் மாதந்தோறும் 600 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

கோயம்புத்தூர்

கோவை


கோவை மாநகரில் கடந்த 2006-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக் கெடுப்பில் 70 ஆயிரம் தெருநாய்கள் இருந்தன. ஆனால் இந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி 1 லட்சத்து 21 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பது தெரியவந்து உள்ளது.

தெருநாய்கள் தொல்லை காரணமாக மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கருத்தடை மையங்களில் தெருநாய்க ளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகின்றன.


இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறியதாவது:-


தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த சீரநாயக்கன் பாளையம், ஒண்டிப்புதூர் மற்றும் உக்கடத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் உள்ளன. அவை தற்போது புதுப்பிக் கப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன. பிரத்யேக வாகனங்கள் மூலம் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

இங்கு மாதந்தோறும் சராசரியாக 600 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.


வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலைகளில் ஆடு, மாடு, குதிரை உள்ளிட்டவற்றை திரிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகளை கோசாலைக்கு அனுப்பி வைத்து அபராதம் விதிக்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.


Next Story