ரூ.61 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


ரூ.61 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.61 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வழங்கினார்

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அருகே உள்ள சொக்கலிங்கம் புரூ.61 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வழங்கினார்

தூர் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமில் அமைச்சர்.கேஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து 194 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சத்து 14 ஆயிரத்து 55 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த செயல் விளக்க கண்காட்சியினை அவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சரண்யாசெந்தில்நாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன், சொக்கலிங்கம் புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் பெருமாள், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஆர்.ஆனந்த் மற்றும் அனைத்து துறை அரசு முதல்நிலை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story