நான் முதல்வன் மதிப்பீடு தேர்வை 618பேர் எழுதினர்.
நான் முதல்வன் மதிப்பீடு தேர்வை 3 மையங்களில் 618 பேர் எழுதினர்.
நான் முதல்வன் திட்டத்தின் போட்டி தேர்வு பிரிவில் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கான மதிப்பீடு தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 964 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்காக காட்பாடி காங்கேயநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி, டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, அக்சிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடந்தது. தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வை 618 மாணவ-மாணவிகள் எழுதினர். 346 பேர் பங்கேற்கவில்லை. தேர்வையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.