63 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்


63 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
x

சிவகாசியில் 63 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்தநிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்டேஸ்சுவரன், மீன் வளத்துறை ஆய்வாளர் சைலஜா தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை பல்வேறு இடங்களில் உள்ள மீன்கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சாட்சியாபுரம் பகுதியில் மட்டும் 63 கிலோ கொட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் இனி வரும் காலங்களில் அடிக்கடி நடக்கும் என்றும், மீன்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் ஐஸ்பெட்டியில் வைத்து விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.


Next Story