ரெயிலில் டிக்கெட் எடுக்காத 637 பேர் பிடிபட்டனர்
ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 637 பேர் பிடிபட ்டனர். அவர்களுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 820 அபராதம் விதிக்கப்பட்டது.
ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 637 பேர் பிடிபட ்டனர். அவர்களுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 820 அபராதம் விதிக்கப்பட்டது.
ரெயில்களில் சோதனை
கோவை ரெயில் நிலையம் வழியாக ஏராளமான ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரெயில்களில் சிலர் டிக்கெட் எடுக்கா மல் பயணம் செய்வதாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மேலும் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி சிலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதாகவும் புகார் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து ரெயில்களில் 21 டிக்கெட் பரிசோதகர்கள் திடீரென்று சோதனை நடத்தினர். அவர்கள், நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை - மேட்டுப்பாளையம் மெமு ரெயில், ஈரோடு பாலக் காடு மெமு ரெயில், ஆலப்புழா தன்பாத் ரெயில், கொச்சுவேலி எக்ஸ்பிரஸ், சென்னை- கோவை எக்ஸ்பிரஸ், சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ், ஈரோடு-திருச்சி ரெயில்களில் சோதனை நடத்தினர்.
அபராதம்
இதில், சேலம் கோட்டத்துக்குட்பட்ட கோவை, மேட்டுப்பாளை யம், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய ரெயில் நிலையங்களில் சோத னை நடத்தப்பட்டது. டிக்கெட் பரிசோதகர்களுக்கு உதவியாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 637 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 820 அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதுபோல் ரெயில்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக் கப்படும். எனவே பயணிகள் டிக்கெட் எடுத்து ரெயிலில் பயணிக்க வேண்டும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.