ரூ.6.38 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்


ரூ.6.38 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
x

ரூ.6.38 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.

அரியலூர்

செந்துறை:

வளர்ச்சி திட்டப்பணிகள்

தமிழ்நாட்டில் உள்ள சாலை உள் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் பெரும்பான்மையான சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று அரியலூர் மற்றும் செந்துறை ஒன்றியங்களில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.6.30 கோடி மதிப்பீட்டில் நான்கு புதிய வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். அந்த பணிகைள அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

சாலைகளை மேம்படுத்தும் பணிகள்

இதன்படி அரியலூர் ஒன்றியம், ராயம்புரம் ஊராட்சியில் ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் ராயம்புரம் - பொட்டவெளி வரை 2.20 கி.மீ உள்ள சாலையை மேம்பாடு செய்வது. 1 சிறுபாலத்தை திரும்ப கட்டுதல் மற்றும் 129 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் கட்டுதல் பணியையும், செந்துறை ஒன்றியம், வாளரக்குறிச்சி கிராமத்தில் ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் இரும்புலிக்குறிச்சி - பாளையக்குடி - மணகெதி வரை உள்ள 3.75 மீட்டர் அகலமுள்ள சாலையை 5.50 மீட்டர் சாலையாக அகலப்படுத்தி பலப்படுத்துதல் பணியையும் தொடங்கி வைத்தார்.

மேலும் நாகல்குழி ஊராட்சியில் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் உஞ்சினி - வாரியங்காவல் சாலையை 5.50 மீ அகலப்படுத்தி பலப்படுத்துதல் பணியினையும், இலைக்கடம்பூர் ஊராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் செந்துறை - மாத்தூர் வரை சாலையை மேம்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

அந்த பணிகளை தரமான பொருட்களை கொண்டு விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சாலை அகலமாக உள்ள இடங்களில் மரங்களை நட்டு வைக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர்கள் சிட்டிபாபு, ராஜா, செந்துறை தாசில்தார் பாக்கியம் விக்டோரியா, செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story