தடை செய்யப்பட்ட 65 கிலோ குட்கா பறிமுதல்


தடை செய்யப்பட்ட 65 கிலோ குட்கா பறிமுதல்
x

திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட 65 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூருவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட 65 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூருவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்சில் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவண்ணாமலை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் திருவண்ணாமலை - காஞ்சி சாலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்குப் பிள்ளையார் கோவில் அருகே பஸ்களில் சோதனையிட தொடங்கினர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு பஸ்சில் போலீசார் சோதனை செய்தபோது 2 பேர் சுமார் 65 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்து தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் பெங்களூருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 35), சந்துரு (24) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story