ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் விழுப்புரத்தில் 67 பேர் கைது


ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் விழுப்புரத்தில் 67 பேர் கைது
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 67 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் வக்கீல் தயானந்தம் தலைமையில் மத்திய அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து விழுப்புரம் மேற்கு போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 67 பேரை கைது செய்து அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story