ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் மூலம்ரூ.68¾ லட்சம் வருமானம்
ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் மூலம்ரூ.68¾ லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
திருச்சி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை மாதந்தோறும் உண்டியலை திறந்து எண்ணுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ரூ.68 லட்சத்து 83 ஆயிரத்து 226 ரொக்கமும், 158 கிராம் தங்கமும், 640 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 233 -ம் இருந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story