வேலூர் மாவட்டத்தில் 699 ரேஷன் கடைகள் இயங்கின


வேலூர் மாவட்டத்தில் 699 ரேஷன் கடைகள் இயங்கின
x

விடுமுறை நாளில் வேலூர் மாவட்டத்தில் 699 ரேஷன் கடைகள் இயங்கின.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 699 ரேஷன் கடைகள் உள்ளன. வேலைக்கு செல்லும் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவை சிரமம் இன்றி வாங்குவதற்காக இந்த கடைகளுக்கு மாதத்தின் முதல் 2 வாரங்களில் வெள்ளிக்கிழமையும், 3,4-வது வாரங்களில் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

தற்போது கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு, சிறப்பு முகாம்கள் மூலம் அவை பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி விடுமுறை தினமான நேற்று அனைத்து ரேஷன்கடைகளும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 699 ரேஷன்கடைகளும் நேற்று இயங்கின. மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் பதிவேற்ற முகாம் நடந்த ரேஷன்கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை கொடுத்து பதிவு செய்தனர். மேலும் பலர் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர்.


Next Story