கரும்பு தோட்டத்துக்கு தூக்கிச்சென்று 6-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்
பண்ருட்டி அருகே கை, கால்களை கட்டி கரும்பு தோட்டத்துக்கு தூக்கிச்சென்று மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் 11 வயதுடைய 6-ம் வகுப்பு மாணவி. சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வெளியூர் சென்றனர். இதனால் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இதைநோட்டமிட்ட பண்ருட்டி அருகே செம்மேடு பழைய காலனியை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான நாகப்பன் (வயது 55) மாணவியின் வீட்டுக்குள் நுழைந்தார். அவர் அங்கிருந்த மாணவியை கை மற்றும் கால்களை கட்டி அதேபகுதியில் இருந்த கரும்பு தோட்டத்துக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து அவர் தப்பிச்சென்றார்.
கைது
இந்த நிலையில் வீட்டுக்கு வந்த பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து பள்ளி மாணவி கூறி கதறி அழுதார். இதைகேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மாணவியின் தாய் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் நாகப்பனை கைது செய்தனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.