கஞ்சா வழக்கில் கைதான 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கஞ்சா வழக்கில் கைதான 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் கஞ்சா வழக்கில் கைதான 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் கஞ்சா வழக்கில் கைதான 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தெரிவித்து உள்ளார்.

7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- நாமக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை இணைந்து மாவட்டம் முழுவதும் போதை பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த சோதனையின் போது கடந்த 6 மாதங்களில் மட்டும் 557 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளது.

கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்ததாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 48 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் கஞ்சாவழக்கில் கைதான 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

150 வங்கி கணக்குகள் முடக்கம்

மேலும் இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் 150 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் சம்பந்தமாக தகவல் கிடைக்கப்பெற்றால் பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு எண் 94981 81216 என்கிற செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story