7 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்


7 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
x

வேலூர் மாவட்டத்தில் 7 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 7 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்தும், வருவாய் ஆய்வாளர் ஒருவருக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்கியும் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் எப்-பிரிவில் தலைமை உதவியாளராக பணிபுரிந்த முரளிதரன் வேலூர் தாலுகா தேர்தல் பிரிவிற்கும், அணைக்கட்டு தாலுகா மண்டல துணை தாசில்தார் திருக்குமரேசன் அதே தாலுகாவில் தேர்தல் பிரிவிற்கும், காவல் பயிற்சி பெறும் ராமலிங்கம் அணைக்கட்டு தாலுகா மண்டலத்துக்கும், காவல் பயிற்சி பெறும் நித்யா வேலூர் கலெக்டர் அலுவலக எப்-பிரிவு தலைமை உதவியாளராகவும், காவல் பயிற்சி பெறும் தனலட்சுமி பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலராகவும், வேலூர் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் பணிபுரிந்த வெங்கட்குமார் கே.வி.குப்பம் தாலுகா தேர்தல் பிரிவிற்கும், வேலூரில் உள்ள தமிழ்நாடு வாணிபக்கழக உதவிமேலாளர் ரவி (கிடங்கு) வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தலைமை உதவியாளர் சுதா அணைக்கட்டு தாலுகாவில் உள்ள மண்டல துணை தாசில்தார் பணியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் வாசுகி குடியாத்தம் தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.


Next Story