வெறிநாய் கடித்து 7 ஆடுகள் பலி


வெறிநாய் கடித்து 7 ஆடுகள் பலி
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-13T00:16:30+05:30)

ஸ்ரீவைகுண்டம், விளாத்துகுளத்தில் வெறிநாய் கடித்து 7 ஆடுகள் பலியாகின.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் மற்றும் விளாத்திகுளத்தில் வெறிநாய் கடித்து 7 ஆடுகள், 3 கோழிகள் பலியாகின.

ஆடுகள் சாவு

ஸ்ரீவைகுண்டம் மேலக்கோட்டை வாசல் தெருவில் வசித்து வருபவர் முத்துபாண்டி. இவர் வீடு அருகில் சிறிய கொட்டகை அமைத்து ஆடு, கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முத்துபாண்டி தனது கொட்டகைக்கு வந்து பார்த்தபோது ஒரு 4 ஆடுகள், ஒரு ஆட்டுக்குட்டி, 3 கோழிகளும் வெறிநாய் கடித்து இறந்து கிடந்தன. மேலும் 2 ஆடுகளை நாய் கடித்ததில் படுகாயத்துடன் இருந்தன.

அதேபகுதியில் மற்றொரு வீடு முன்பு கட்டப்பட்டிருந்த ஒரு ஆடும், கோழியும் நாய் கடித்து இறந்துள்ளன. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் பாரதி தெருவைச் சேர்ந்த வேல்முருகன். விவசாயி. இவர் 2 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 2 ஆடுகளை ஆட்டுக்கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றுள்ளார். நேற்று காலையில் மேய்ச்சலுக்கு ஆடுகளைக் கூட்டிச் செல்ல கொட்டகையில் சென்று பார்த்தபோது, 2 ஆடுகளும் வெறி நாய் கடித்து இறந்த நிலையில் கிடந்துள்ளன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து வேல்முருகனின் ஆட்டுக்கொட்டகைக்கு சென்ற பேரூராட்சி அதிகாரிகள் நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளை பார்வையிட்டனர்.


Next Story