நம்பியூர் அருகே கார் கவிழ்ந்து 7 பேர் படுகாயம்


நம்பியூர் அருகே கார் கவிழ்ந்து 7 பேர் படுகாயம்
x

நம்பியூர் அருகே கார் கவிழ்ந்தது

ஈரோடு

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பூதிமடைபுதூரில் உள்ள அண்ணன்மார் கோவில் திருவிழாவிற்காக 11 பேர் ஒரு காரில் சென்றுகொண்டு இருந்தார்கள். மகேஷ் (வயது 27) என்பவர் காரை ஓட்டினார்.குருமந்தூர்-கொளப்பலூர் ரோட்டில் சென்றபோது, பூதிமடைப்புதூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் மகேஷ் உள்பட காரில் பயணம் செய்தமஞ்சுநாதன், நாகராஜ், மாதம்மாள், பத்திரம்மா, பல்லவி, திவ்யா ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தார்கள். இவர்கள் அனைவரும் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எஞ்சிய 4 பேர் சிறு காயங்களுடன் தப்பினார்கள்.இந்த விபத்து குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story