தேசிய கராத்தே போட்டியில் திருச்சிக்கு 7 பதக்கங்கள்


தேசிய கராத்தே போட்டியில் திருச்சிக்கு 7 பதக்கங்கள்
x

தேசிய கராத்தே போட்டியில் திருச்சிக்கு 7 பதக்கங்கள் கிடைத்தது.

திருச்சி

தேசிய அளவிலான சென்னை ஓப்பன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்தது. 16 மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். திருச்சி சார்பில் சர்வதேச நடுவர் காளீசன் தலைமையில் 15 பேர் கலந்து கொண்டனர். போட்டிகளின் முடிவில் திருச்சி அணியினர் 7 பதக்கங்களை பெற்றனர். 11 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கட்டா மற்றும் குமித்தே போட்டிகளில் தனுஷ்கா 2 தங்கப்பதக்கங்களை தட்டிச் சென்றார். இதே வயது பிரிவில் குமித்தே போட்டியில் சசிதர்ஷன் தங்கம் வென்றார். 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஸ்ரீவத்சன் குமித்தே போட்டியிலும், 8 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கட்டா போட்டியில் பிரணவேலும் தங்கப்பதக்கம் பெற்றனர். இதே வயது பிரிவில் கட்டா போட்டியில் லக்சன், ஆதவ் வெண்கலப்பதக்கம் பெற்றனர். பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகள் ரெயில் மூலம் திருச்சி திரும்பினர். தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க மாநில துணைத்தலைவர் இளஞ்செழியன், தேசிய நடுவர் சசிகுமார் ஆகியோர் தலைமையில் பதக்கம் வென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story