மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவருக்கு 7 மாதம் சிறை


மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவருக்கு 7 மாதம் சிறை
x

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவருக்கு 7 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ஆற்காடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமரேசன் மற்றும் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் மேல்விஷாரம் பகுதி சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து சோதனை செய்தபோது அவர் வந்த ேமைாட்டார்சைக்கிள் ஆற்காடு பஸ் நிலைய பகுதியில் உள்ளஓட்டல் அருகே திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் என்பது தெரிய வந்தது.

விசாரணையில் அவர் ஆற்காடு கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (வயது 26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தினேஷ்குமாரை போலீசார் கைத செய்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

இது குறித்த வழக்கு ஆற்காடு குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட் தீபிகா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட தினேஷ்குமாருக்கு 7 மாதம் சிறைத்தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு தீபிகா உத்தரவிட்டார்.


Next Story