விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மேலும் 7 பேர் கைது


விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மேலும் 7 பேர் கைது
x

ஆரணியில் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மாவட்ட செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

ஆரணியில் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மாவட்ட செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

அவதூறாக பேசினர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், பூட்டியிருந்த பக்கத்து கடையின் சுவரை துளையிட்டது சம்பந்தமாக ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் எம்.கே.பாஸ்கரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை ஒருமையிலும், சாதி பெயரைச் சொல்லியும் பேசியது சமூக வலைதளங்களில் பரவியது.

இதனால் பணி செய்ய விடாமல் தடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் கடந்த மாதம் 26-ந்் தேதி ஜாமீனில் வெளியே வந்தனர்.

ஜாமீனில் வந்த அவர்கள் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தின் முன்பு போலீசாரை மீண்டும் அவதூறாக பேசி உள்ளனர். இதுவும் சமூக வலைதளங்களில் பரவியது. அதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை போலீசார் உடனடியாக 9 பேரை கைது செய்தனர். பின்னர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 7 பேர் கைது

இந்த நிலையில் நேற்று ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், டவுன் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், தாலுகா இன்ஸ்பெக்டர் புகழ், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், ஷாபுதீன் மற்றும் தனிப்படை போலீசார் மெய்யூர் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜன் (வயது 36), வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் (38), இரும்பேடு காமராஜர் நகரை சேர்ந்த முருகன் (42), நேத்தப்பாக்கத்தை சேர்ந்த சரண் (32), புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின் என்கிற விஷ்ணு (29), லாடவரத்தைச் சேர்ந்த சதீஷ் (24), தேசூர் காலனியை சேர்ந்த பிரபாகரன் (36) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

அவர்கள் 7 பேரும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள மாவட்ட செயலாளர் எம்.கே.பாஸ்கரன் உள்பட மற்றவர்களையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


Next Story