முகநூலில் அறிமுகமான ஒரு வாரத்தில் திருமணம் செய்வதாக பெண்ணிடம் 7 பவுன் நகை அபேஸ்


முகநூலில் அறிமுகமான ஒரு வாரத்தில் திருமணம் செய்வதாக பெண்ணிடம் 7 பவுன் நகை அபேஸ்
x

முகநூலில் அறிமுகமான ஒரு வாரத்தில் திருமணம் செய்வதாக கன்னியாகுமரிக்கு வரவழைத்து பெண்ணிடம் 7 பவுன் நகையை மோசடி செய்த சென்னையை சேர்ந்த ஆசாமியை தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

முகநூலில் அறிமுகமான ஒரு வாரத்தில் திருமணம் செய்வதாக கன்னியாகுமரிக்கு வரவழைத்து பெண்ணிடம் 7 பவுன் நகையை மோசடி செய்த சென்னையை சேர்ந்த ஆசாமியை தேடிவருகின்றனர்.

முகநூல் பழக்கம்

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 43 வயது ஆகிறது. இவருடைய கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் அந்த பெண்ணுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜ் என்பவருக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு கடந்த 1 வாரமாக செல்போனில் பேசியுள்ளனர். அப்போது ராஜ், என்னுடைய மனைவியும் இறந்ததாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை நேற்று மாலை கன்னியாகுமரிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு பகவதி அம்மன் கோவிலில் வைத்து தாலி கட்டிக் கொள்வோம், அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி பெண்ணின் கழுத்தில் கிடந்த7 பவுன் தங்க சங்கிலியை கேட்டுள்ளார். இதனை நம்பி அவரும் தங்க சங்கிலியை கழற்றி கொடுத்துள்ளார்.

7 பவுன் நகை அபேஸ்

இதை பெற்றுக் கொண்ட ராஜ் கடலில் குளித்து விட்டு வருகிறேன் எனக்கூறி சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. இதனால் ராஜின் செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்தார். மேலும் இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

====



Next Story