7 பேர் கைது


7 பேர் கைது
x

7 பேர் கைது

தஞ்சாவூர்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சிராஜ்பூர் நகரில் காலியாக இருந்த இடத்தில் கடந்த 4-ந் தேதி 300-க்கும் மேற்பட்டோர் திடீரென தற்காலிக கொட்டகைகளை அமைத்தனர். பின்னர் போலீசாரும், வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி கொட்டகை அமைத்தவர்களை கலைந்து போக கூறினர். மேலும் அந்த பகுதியில் 144 தடை உத்தரவை கோட்டாட்சியர் ரஞ்சித் பிறப்பித்தார். இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை போலீசார் முன்னிலையில் கொட்டகைகள் அப்புறப்படுத்திய போது ஏராளமான ஆண்கள், பெண்கள் திரண்டு வந்து கொட்டகைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த கம்பி வேலிகள், கருங்கல் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தினர்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக் கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூவத்தூர் ஜெய்சங்கர் (வயது50), மறியல் பகுதியை சேர்ந்த ராஜன் (56), தமிழ் முதல்வன் (54), மாரிமுத்து (62), வினோத்ராஜா (38), முனியாண்டவர் காலனி விஜயேந்திரன் (35), குருங்குளம் முருகானந்தம் (36) ஆகிய 7 பேரையும் கம்பி வேலிகளை சேதப்படுத்தியதாக கைது செய்தனர்.


Related Tags :
Next Story