சூதாடிய 7 பேர் கைது


சூதாடிய 7 பேர் கைது
x

விருதுநகர் அருகே சூதாடிய 7 பேரை கைது செய்தனர்.

விருதுநகர்


விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் வச்சக்காரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ் ரோந்து சென்றார். அப்போது மேம்பாலம் அருகில் உள்ள மனமகிழ் மன்றத்தில் சாத்தூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 30), அழகாபுரி அரி ராமர் (40), விருதுநகர் காளிராஜ் (40), பாலமுருகன் (36), சாத்தூர் ஜி.மணிகண்டன் (36), மாரிமுத்து (44), அருப்புக்கோட்டை முத்துராஜ் (49) ஆகிய 7 பேர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.2,800-ஐ பறிமுதல்செய்த இன்ஸ்பெக்டர் ராமராஜ், அவர்கள் 7 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தார்.



Related Tags :
Next Story