ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது


ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது
x

சென்னை எர்ணாவூர் ரவுடி கொலை வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 23-வது பிளாக்கில் வசித்து வந்தவர் உமர் பாஷா (வயது 23). இவர் மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், இவரை மர்ம கும்பல் ஒன்று நேற்று முன்தினம் வெட்டி கொலை செய்தது. இதுபற்றி செங்குன்றம் துணை கமிஷனர் மணிவண்ணன், உதவி கமிஷனர் பிரம்மானந்தம், எண்ணூர் இன்ஸ்பெக்டர் கிளாஸ்டின் டேவிட் மற்றும் சுதாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கொலை தொடர்பாக செங்குன்றம் அமைந்தகரையை சேர்ந்த பிரபல ரவுடி சேது என்கிற மணிகண்டன் (35), பாரத் குமார் (27), அஜித்குமார் (25), ஏசாபிரவின் (24), திப்பு சுல்தான் (23), உதிந்திரன் (23), அவினாஷ் (23) ஆகிய 7 பேர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இதனையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story