பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
திருவாடானையில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா பாசிப்பட்டினம் கந்தூரி தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த மகாலிங்கம் உள்பட 7- பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரொக்க பணம் ஆயிரம், 52 சீட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire