காசு வைத்து சூதாடிய 7 பேர் கைது


காசு வைத்து சூதாடிய 7 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2023 5:48 PM GMT (Updated: 19 Jun 2023 7:33 AM GMT)

ஜோலார்பேட்டையில் காசு வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜோலார்பேட்டை அருகே உள்ள ஜெயமாதா நகர் பகுதியில் காசு வைத்து சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு ரெயில்வே குடியிருப்பு பகுதியில் காசு வைத்து சூதாடிய சந்தைக்கோடியூர் வக்கணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சந்திரசேகரன் (வயது 40), அரவிந்தன் (30), சிவகுமார் (49), பிரேம்குமார் (42), அருள் நாதன் (39), மணிகண்டன் (23), காந்தி ராமன் (45) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.250 மற்றும் 40 பொம்மை சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story