மது விற்ற 7 பேர் கைது


மது விற்ற 7 பேர் கைது
x

மது விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை ஈடுபட்டனர். அப்போது, புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ் (வயது 43), கடவூரை சேர்ந்த தங்கராஜ் (50), பொன்னுச்சாமி (42), திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த முருகன் (40), கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த நதியா (36), மதிவாணன் (55), கிருஷ்ணமூர்த்தி (51) உள்பட 7 பேர் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story