போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் கைது


போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் கைது
x

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்


கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

போதை மாத்திரை விற்பனை

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் மாநகர் முழுவதும் கஞ்சா, குட்கா, போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பெரிய கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தாஸ், சப் இன்ஸ்பெக்டர் ஆசீர்வாதம் ஆகியோர் உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 100 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த பக்ருதீன் (வயது 30) என்பது தெரியவந்தது.

7 பேர் கைது

இதேபோல ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் பாப்பநாயக்கன் பாளையம் பரமேஸ்வரி லே அவுட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் செல்வபுரம் இந்திராநகரை சேர்ந்த சிவசூர்யாா (25), சாய்பாபாகாலனி என்.எஸ்.ஆர்.ேராடு பகுதியை சர்ந்த கிஷோர் குமார் (24) என்பதும், இவர்கள் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, அவரிடம் இருந்த போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் ஆகியோர் போத்தனூர் ஜம்.ஜம். நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த மைல்கல், பாரதிநகரை சேர்ந்த சித்திக் என்ற அபூபக்கர் சித்திக் (28), ஷாருக்கான் (25), குனியமுத்தூர் காந்திநகரை சேர்ந்த அப்துல்லத்திப் (27), உக்கடம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ரசீத் என்ற பிக்கி (33) ஆகிய 4 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த போதை மாத்திரைகள் மற்றும் ஊசி பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.

536 மாத்திரைகள் பறிமுதல்

கைதான போதைப்பொருட்கள் விற்பனை கும்பலிடம் மொத்தம் 536 போதை மாத்திரைகள் மற்றும் ஊசியை போலீசார் பறிமுதல் செய்தனர். போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றி வாலிபர்கள் போதை அனுபவித்து வருகின்றனர். இதில் சில கும்பல் கல்லூரி மாணவர்களை குறி வைத்து இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story