கரூரில் மதுபானங்களை பதுக்கி விற்ற 7 பேர் கைது
கரூரில் மதுபானங்களை பதுக்கி விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருபவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். அதன்படி மதுவிலக்கு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் ஆகியோர் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பசுபதிபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30), மண்மங்கலத்தை சேர்த்த சோலியப்பன் (66), முத்துச்சாமி (40), வீரராக்கியத்தை சேர்ந்த ஆசைதம்பி (57), தேவசிகாம்பட்டியை சேர்ந்த கருப்பன் (56), குளித்தலையை சேர்ந்த துளசி (49), திருச்சியை சேர்ந்த பழனிச்சாமி (50) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 46 மது பாட்டில்கள் மற்றும் 3 லிட்டர் எரிசாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story