முன்னால் சென்ற லாரி மீது ஆம்னி பஸ் மோதி 7 பேர் காயம்


முன்னால் சென்ற லாரி மீது ஆம்னி பஸ் மோதி 7 பேர் காயம்
x

நாட்டறம்பள்ளி அருகே முன்னால் சென்ற லாரி மீது ஆம்னி பஸ் மோதி 7 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

வேலூரில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வழியாக சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு பெங்களூருைவ நோக்கி ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் மேம்பாலம் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்றபோது, முன்னால் சென்ற லாரிைய முந்திச்செல்ல முயன்ற ஆம்னி பஸ் திடீரென லாரியின் பின் பக்கம் மோதி விபத்துக்குள்ளானது.

அதில் கலவை பகுதியைச் சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் ராஜா (வயது 49) மற்றும் ஓசூரை சேர்ந்த பயணிகள் ரவி (30), பெங்களூருவைச் சேர்ந்த மாலா (40), சரவணன் (37), பவுனம்மாள் (22), தீபக் ராஜா (21), திருலங்கா (23) என 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக ஆம்னி பஸ் டிரைவர் ராஜா ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்னி பஸ் டிரைவரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.


Next Story