பயங்கரவாதிகள் போல் மீண்டும் கடலூருக்குள் ஊடுருவ முயன்ற 7 பேர் பிடிபட்டனர்


பயங்கரவாதிகள் போல் மீண்டும் கடலூருக்குள் ஊடுருவ முயன்ற 7 பேர் பிடிபட்டனர்
x

பாதுகாப்பு ஒத்திகையையொட்டி பயங்கரவாதிகள் போல் மீண்டும் கடலூருக்குள் ஊடுருவ முயன்ற 7 பேர் பிடிபட்டனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

இந்திய கடற்படையால், சி விஜில் என்ற பெயரில், இந்தியா முழுவதும் கடலோர பகுதிகளில் 2 நாட்கள் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் கடலூர் துறைமுகம் வழியாக பயங்கரவாதிகள் போல் வேடமிட்டு நுழைய முயன்ற மத்திய, மாநில அதிரடி படையை சேர்ந்த கமாண்டோ போலீசார் 7 பேரை கடலோர காவல் படை குழும போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே சி விஜில் ஆபரேஷன் படி, பயங்கரவாதிகள் போல் மாறுவேடத்தில் வந்த 7 போலீசாருக்கும் மீண்டும் இலக்கை அடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இரவு, அவர்கள் 7 பேரும் மீண்டும் விசைப்படகு ஒன்றில் கடலூர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு கடலுக்குள் சென்றனர். அதனை தொடர்ந்து கடலூர் துறைமுகம் அருகே ரோந்து பணியில் இருந்த கடலோர காவல் படை குழும இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார், மீண்டும் அவர்கள் 7 பேரையும் மடக்கி பிடித்து துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.


Next Story