7 கோவில்கள் குடமுழுக்கு
கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் 7 கோவில்கள் குடமுழுக்கு 3-ந் தேதி நடக்கிறது
திருவெண்காடு:
பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள செல்வ வினாயகர், மனோன்மணி சமேத கைலாசநாதர், லட்சுமிநாராயண பெருமாள், ஆஞ்சநேயர், சீதளாதேவி மாரியம்மன், மன்மதன் சாமி மற்றும் கூந்தாளம்மன் ஆகிய 7 கோவில்களில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்குள் மேற்கண்ட 7 கோவில்களின் குடமுழுக்கு நடக்கிறது. இதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை விநாயகர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. மாலை முதல் கால யாகசால பூஜை நடக்கிறது. தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை நடக்கும் 2-ம் கால யாகசாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு அருளாசி வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டி தலைவரும், தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளருமான ஞானவேலன் தலைமையில், கிராம மக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.