பிளஸ்-1 பொதுத்தேர்வை 7 ஆயிரத்து 443 மாணவ,மாணவிகள் எழுதினர்
நாகை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 7 ஆயிரத்து 443 மாணவ,மாணவிகள் எழுதினர்.
நாகை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 7 ஆயிரத்து 443 மாணவ,மாணவிகள் எழுதினர்.
பிளஸ்-1 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. அதேபோல நேற்று பிளஸ்-1 பொதுத் தேர்வு தொடங்கியது. அதன்படி நாகை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுத 3 ஆயிரத்து 883 மாணவர்களும், 4 ஆயிரத்து 341 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 224 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் 3 ஆயிரத்து 413 மாணவர்களும், 4 ஆயிரத்து 30 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 443 பேர் தேர்வு எழுதினர். 470 மாணவர்களும், 311 மாணவிகளும் என மொத்தம் 781 பேர் தேர்வு எழுத வரவில்லை.
5 பறக்கும் படை
காலை முதலே மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு மையத்துக்கு வந்தனர். தொடர்ந்து நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தேர்வு அறை குறித்த விவரங்கள் அடங்கிய நோட்டீசில் தங்களது பதிவு எண்களை சரி பார்த்துவிட்டு உள்ளே சென்று ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.
இந்த பொது தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 5 பறக்கும் படை குழுவினரும், 56 நிலையான பறக்கும் படை உறுப்பினர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அனைத்து தேர்வு மைய நுழைவு வாயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.