அரசு பஸ் கண்டக்டருக்கு 7 ஆண்டு சிறை


அரசு பஸ் கண்டக்டருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு பஸ் கண்டக்டருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

சிவகங்கை

சிவகங்கை

பாலியல் தொல்லை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது 56). அரசு போக்குவரத்து கழக கண்டக்டர். இவருக்கு சொந்தமாக அதே தெருவில் பலசரக்கு கடை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி அவரது கடைக்கு வந்த 10 வயது சிறுமியை தமிழ்வாணன் பாலியல் ரீதியாக தொல்லை செய்தாராம்.

இது தொடர்பாக அவரது தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

சிறை தண்டனை

இதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் தமிழ்வாணனை கைது செய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனலட்சுமி ஆஜரானார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத்ராஜ், குற்றம் சாட்டப்பட்ட தமிழ்வாணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் சார்பில் ரூ.2 லட்சம் நஷ்ட ஈடாக வழங்கவும், தமிழ்வாணன் செலுத்தும் அபராத தொகை ரூ5 ஆயிரத்தையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி சரத் ராஜ் உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story