வாலிபருக்கு 7 ஆண்டு சிறை


வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 11 Aug 2023 2:30 AM IST (Updated: 11 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களிடம் செல்போன் பறித்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை


கோவை சிங்காநல்லூர் கே.பி.ஆர். லே-அவுட் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஹரிபிரகாஷ். இவர் கடந்த 9.10.2021 தன்னுடைய நண்பர் அனீசுடன் அந்த பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த ராமசாமி லே-அவுட்டை சேர்ந்த சவுந்தர்ராஜன் (வயது 24) என்பவர், 2 பேரிடமும் தகராறு செய்தார். பின்னர் மாணவர் ஹரிபிரகாசின் தலை மற்றும் தொடையில் கத்தியால் குத்தி அவருடைய செல்போன், ரூ.300 மற்றும் அவருடைய நண்பர் அனீசின் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். காயம் அடைந்த ஹரிபிரகாஷ் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறினார். இதுகுறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.


இந்தவழக்கு விசாரணை கோவை 3-வது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வேதகிரி, குற்றம்சாட்டப்பட்ட சவுந்தர்ராஜனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜர் ஆனார். சவுந்தர்ராஜனுடன் உடந்தையாக இருந்ததாக 17 வயது சிறுவனும் இந்தவழக்கில் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். சிறுவன் மீதான வழக்கு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி கோர்ட்டில் தனி வழக்காக நடைபெற்று வருகிறது.



Next Story