700 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
மீஞ்சூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 700 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்
மீஞ்சூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி மீஞ்சூரில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது தனியாருக்கு சொந்தமான இனிப்பு கடை ஒன்றில் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் நான்கு சாலையோர கடைகளில் 212 கிலோ பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், ரூ.16 ஆயிரத்து 300 அபராதமும் விதித்தனர்.
Related Tags :
Next Story