700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது


700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
x

700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் அரிமளம் பேரூராட்சி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சுரேஷ்குமார் மனைவி முத்தழகு என்பவரது வீட்டில் சோதனை செய்த போது 700 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story