700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

ரெயிலில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

வேலூர் பறக்கும் படை தாசில்தார் கோடீஸ்வரன் தலைமையிலான குழுவினரும், காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான குழுவினரும் காட்பாடி ரெயில் நிலையத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்களில் சோதனை செய்தனர். அப்போது மைசூர் எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ், பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் பயணிகளின் இருக்கைகள் அடியிலும் கழிவறையிலும் ரேஷன் அரிசியை மர்மநபர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. சுமார் 25 மூட்டைகளில் இருந்த 700 கிலோ ரேஷன் அரிசியை அவர்கள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை திருவலத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர். மேலும் கடத்திய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story