ராஜாக்கமங்கலம் அருகே சொகுசு காரில் கடத்தப்பட்ட 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


ராஜாக்கமங்கலம் அருகே சொகுசு காரில் கடத்தப்பட்ட 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

ராஜாக்கமங்கலம் அருகே சொகுசு காரில் கடத்தப்பட்ட 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ராஜாக்கமங்கலம் பகுதியில் சொகுசு காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நேற்று மாலை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து குமரி மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி விமலாராணி தலைமையில் வருவாய் ஆய்வாளர் கவுதம்பெருமாள் உள்ளிட்டோர் நேற்று இரவு ராஜாக்கமங்கலம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை வழிமறித்து நிறுத்தினர். அதிகாரிகள் வழிமறிப்பதைப் பார்த்ததும், அந்த காரை ஓட்டி வந்த டிரைவர் சாலை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் கார் டிக்கியை திறந்து பார்த்தபோது அதில் 700 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி சிறு, சிறு மூடைகளில் கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த சொகுசு காரையும், காரில் இருந்த 700 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் ரேஷன் அரிசியை நாகர்கோவில் கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

1 More update

Next Story