75 லிட்டர் சாராயம் பறிமுதல்


75 லிட்டர் சாராயம் பறிமுதல்
x

75 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது புக்குளி கிராமம். இந்த கிராமத்தின் அருகில் உள்ள கண்மாய்கரை பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவரது தலைமையில், இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ், சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் தாரிக், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், பக்ருதீன், போலீஸ்காரர் ராஜா ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள கருவேல மரங்களுக்கு நடுவே சுமார் 75 லிட்டர் சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சாராயம் காய்ச்ச வைத்திருந்த ஊறலை போலீசார் கீழே ஊற்றி அழித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் காய்ச்சிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.



Next Story