75 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவை - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
75 மேம்படுத்தப்பட்ட புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை வலுப்படுத்தும் விதமாக 75 மேம்படுத்தப்பட்ட புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையையும், மனநல சிகிச்சையில் குணம் அடைந்தவர்களுக்கான இடைநிலை பராமரிப்பு நிலையத்தையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், மனநல நல்லாதரவு மன்றம் மற்றும் 'நட்புடன் உங்களோடு' என்ற மனநல சேவையையும் தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story