108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 75 ஆயிரம் பேர் பயன்


108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 75 ஆயிரம் பேர் பயன்
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 75 ஆயிரம் பேர் பயன் அடைந்ததாக அதிகாரி தெரிவித்தார்.

கோயம்புத்தூர்


கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 75 ஆயிரம் பேர் பயன் அடைந்ததாக அதிகாரி தெரிவித்தார்.

108 ஆம்புலன்ஸ்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்கு பெரிதும் உதவி வருகிறது. இதற்காக கோவை மாவட்டத்தில் 66 ஆம்பு லன்ஸ்கள் உள்ளன. அவை, கவுண்டம்பாளையம், துடியலூர், அன்னூர், மேட்டுப் பாளையம், காரமடை, பெரியநாயக்கன் பாளையம், சூலூர், கருமத்தம்பட்டி, தடாகம், ஆனைக்கட்டி, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை உள்பட 58 பகுதிகளில் ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

பொதுமக்கள் விபத்தில் சிக்கினாலோ அல்லது ஆபத்தான நிலையில் இருந்தாேலா அழைப்பு வந்த உடன் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு சென்று முதலுதவி மற்றும் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வருவது என்று சேவை செய்து வருகிறது.

12 நிமிடத்துக்குள் சேவை

அந்த வகையில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் கள் பயன் அடைந்து உள்ளனர்.

இது குறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட திட்ட மேலாளர் செல்வமுத்துக்குமார் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் கடந்த ஆண்டு மட்டும் 75 ஆயிரத்து 631 பேர் பயன் அடைந்து உள்ள னர். இதில் 13 ஆயிரத்து 820 சாலை விபத்து, 15 ஆயிரத்து 788 பிரசவ சேவை செய்து உள்ளோம். 49 கர்ப்பிணிகளுக்கு 108 ஆம்புலன்சுகளிலேயே பிரசவம் நடந்து இருக்கிறது.

இதில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் 7 ஆயிரத்து 572 சேவையை வழங்கி இருக்கிறோம். இதில் ஒரு இடத்தில் இருந்து அழைத்தால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சராசரியாக 11.57 நிமிடத்துக்குள் சென்று விரைவான சேவையை அளித்து உள்ளோம். இதன் மூலம் உயிரிழப்பு தடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story