பிளஸ்-2 தேர்வை 7,654 பேர் எழுதினார்கள்


பிளஸ்-2 தேர்வை 7,654 பேர் எழுதினார்கள்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 தமிழ் பாட தேர்வை 7,654 பேர் எழுதினார்கள்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 தமிழ் பாட தேர்வை 7,654 பேர் எழுதினார்கள்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் உள்பட மொத்தம் 67 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் என மாணவர்கள் 3,923 பேரும், மாணவிகள் 4,202 பேரும் சேர்த்து மொத்தம் 8,131 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

இதில் மாணவர்கள் 3,644 பேரும், மாணவிகள் 4,010 சேர்த்து மொத்தம் 7,654 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்கள் 279 பேரும், மாணவிகள் 198 பேரும் சேர்த்து 477 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பறக்கும் படையினர்

மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு வழித்தட அலுவலர்கள் எடுத்து சென்றனர். தேர்வர்களை கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள் உள்பட 650 பேர் ஈடுபட்டனர். இது தவிர தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 50 பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் அனைத்து தேர்வு மையங்களிலும் சோதனை செய்தனர். மேலும் அந்தந்த தேர்வு மையங்களில் நிலையான பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

புகார் பெட்டி

தேர்வு மையத்திற்கு வெளியே தேர்வில் காப்பி அடித்தால் தேர்வு எழுத தடை விதிக்கப்படும், செல்போன் கொண்டு வர கூடாது என்பது போன்ற அறிவுரைகள் கொண்ட வாசகங்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இது தவிர ஏதாவது குறைகள் இருந்தால் தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story