7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி கோப்பை அறிமுக விழா


7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி கோப்பை அறிமுக விழா
x

திருவண்ணாமலையில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி கோப்பையை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அறிமுகம் செய்து வைத்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி கோப்பையை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அறிமுகம் செய்து வைத்தார்.

ஆக்கி போட்டி

சென்னையில் வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பை - 2023 போட்டி நடைபெற உள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் நடைபெறுகின்ற இப்போட்டியை ஆக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழக அரசு நடத்த உள்ளது.

இப்போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய 6 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. சென்னையில் 7-வது ஆசிய சாம்பியன் ஆக்கி போட்டி தமிழ்நாடு அரசால் நடத்தப்பட உள்ளன.

இப்போட்டிக்கான கோப்பையினை அனைத்து மாவட்டத்திற்கும் தொடர் ஓட்டமாக கொண்டு சென்று அறிமுகம் செய்து வருகிற 3-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி விளையாட்டு போட்டிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

இதுவரை நடைபெற்ற 6 ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பை போட்டியில் இந்திய அணி 2 வெற்றியும், ஒரு இணை வெற்றியும் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்பை அறிமுக விழா

இந்த நிலையில் இந்த கோப்பை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. பின்னர் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பைக்கான ஊர்வலம் நடைபெற்றது.

இதில் மாநில தடகள சங்க துணைதலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் முன்னிலையில் கோப்பையினை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு விளையாட்டு அரங்கில் கலெக்டர் முருகேசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற கோப்பை அறிமுக விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமை தாங்கி 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஆக்கி கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து அவருடன் கலெக்டர், மாநில தடகள சங்க துணைத் தலைவர் ஆகியோர் இணைந்து ஆக்கி போட்டியை மட்டையால் பந்தை தட்டி தொடங்கி வைத்தினர்.

பின்னர் கலெக்டர் கோப்பையை தர்மபுரி மாவட்டத்திற்கு கொண்டு செல்லவதற்காக அந்த மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியில் மாநில ஆக்கி சங்க துணைத்தலைவர் ஜீபேர் அகமத், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், திருவண்ணாமலை மாவட்ட ஆக்கி சங்க செயலாளர் சதீஷ் குமார், பொருளாளர் ராஜேஷ், துணை தலைவர் காமராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story