குட்டையில் மீன் பிடிக்க சென்ற 7-ம் வகுப்பு மாணவன் மூச்சு திணறி பலி


குட்டையில் மீன் பிடிக்க சென்ற 7-ம் வகுப்பு மாணவன் மூச்சு திணறி பலி
x

குட்டையில் மீன் பிடிக்க சென்ற 7-ம் வகுப்பு மாணவன் மூச்சு திணறி பலியானான்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

குட்டையில் மீன் பிடிக்க சென்ற 7-ம் வகுப்பு மாணவன் மூச்சு திணறி பலியானான்.

நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை சந்தை மேட்டில் வசித்து வருபவர் அருண். இவரது மகன் பார்த்திபன் (வயது 12) வீட்டின் அருகே உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று புனித வெள்ளி என்பதால் பள்ளி விடுமுறை விடப்பட்டது.இதனை தொடர்ந்து பார்த்தீபன் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்கச் சென்றான்.

அப்போது குட்டையில் இருந்த சேற்றில் சிக்கி தவித்தான். சேற்றுடன் இருந்த தண்ணரையும் குடித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டது. சக நண்பர்கள் கூச்சல் போடவே அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து மயங்கிய நிலையில் கிடந்த பார்த்திபனை மீட்டு அருகில் உள்ள புதுப்பேட்டை அரசு சமுதாய நிலைய மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்திபன் இறந்து விட்டான். இது குறித்து தந்தை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் அருண் புகார் கொடுத்தார். அதன்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி மாணவன் மீன் பிடிக்க சென்றபோது பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story