8 குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல்


8 குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல்
x

8 குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

திருச்சி

மூச்சுத்திணறல்

திருச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைகள், மாவட்ட குழந்தைகள் நல குழுவினால் மீட்கப்பட்டு அரசு நிதியுடன் திருவானைக்காவல் மாம்பல சாலை அருகே உள்ள காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் அந்த காப்பகத்தில் உள்ள 3 முதல் 9 மாத குழந்தைகள் என 20 குழந்தைகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை, தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் 8 குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதை பார்த்ததும் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதையடுத்து 8 குழந்தைகளையும் மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

அந்த குழந்தைகளுக்கு 24 மணி நேரமும் பலத்த கண்காணிப்புடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 2 ஆண் குழந்தைகள், 6 பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த குழந்தைகளுக்கு சளி தொந்தரவு இருந்ததாகவும், இதன் காரணமாக தடுப்பூசி போட்ட பின்பு அந்த குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


Next Story